திருக்குறள்

திருக்குறள் அறிமுகம்:-

அற நூல்களில் உலகப் புகழ்பெற்ற ஒப்பற்ற உயரிய நூலாகத் திகழ்வது திருக்குறள். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் 133 அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் பத்துக் குறட்பாக்களாக 1330 குறட்பாக்களையும் கொண்டது.

அறத்துப்பாலில் திருவள்ளுவரின் அன்புள்ளத்தையும் துறவுள்ளத்தையும், பொருட்பாலில் அவரின் அரசியல், பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த அறிவையும், காமத்துப்பாலில் அவரின் கற்பனையுள்ளத்தையும் வருணனைத் திறத்தையும் நாடகப் போக்கையும் காணலாம்.

பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார் முதலானோர் இந்நூலுக்கு உரையெழுதியுள்ளனர். இன்றும் இந்நூலுக்கு அறிஞர் பெருமக்கள் பலர் புத்துரை எழுதி அணி சேர்க்கின்றனர்.

ஓதற்கு எளிதாகவும் உணர்தற்கு அரிதாகவும் உலகப் பொதுமறையாகவும் விளங்கும் திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 Tirukkural on Virtue (அறப்பால்) (உரையாசிரியர்: ஃப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்) 1812 உரை & மொழிபெயர்ப்பு
2 திருக்குறண்மூலமும் நாலடிநானூற்றின் மூலமும் (பதிப்பாசிரியர்: தாண்டவராய முதலியார்; வெளியீடு: சர்ச்சிமிசியோன் அச்சுக்கூடம்) 1831 மூலம்
3 திருக்குறண்மூலமும் பரிமேலழகருரையும் (பதிப்பாசிரியர்: ஆறுமுகநாவலர்; வெளியீடு: வாணிநிகேதனவச்சுக்கூடம், சென்னபட்டணம்) 1861 உரை
4 திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் தொகுதி 1 (அறத்துப்பால்) (பதிப்பாசிரியர்: அ.அ. மணவாளன்; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2010 மொழிபெயர்ப்பு
5 திருக்குறள் பஞ்சாபி மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர்: முனைவர் தார்லோச்சன் சிங் பேடி; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு
6 திருக்குறள் மணிப்புரி மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர்: சோய்பம் ரெபிக்கா தேவி; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு
7 Na Tirukurala (Fizi) (திருக்குறள் பிஜி மொழிபெயர்ப்பு) (மொழிபெயர்ப்பாளர்: சாமுவேல் எல். பெர்விக்; வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், சென்னை.) 1964 மொழிபெயர்ப்பு
8 तिरुवल्लुवर की वाणी (திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு) (மொழிபெயர்ப்பாளர்: டீ.ஈ.எஸ். இராகவன்; வெளியீடு: வசந்தா புக் டிரஸ்ட், சென்னை.) 1986 மொழிபெயர்ப்பு
9 . திருக்குறள் காமத்துப்பால் காலிங்கருரை - பரிப்பெருமாளுரை (பதிப்பாசிரியர்: டி.பி. பழனியப்ப பிள்ளை; வெளியீடு: திருவேங்கடேசுவரன் கீழ்கலை ஆராய்ச்சிக் கழகம்- திருப்பதி) 1945 உரை
10 புனித திருக்குறளை உருவாக்கும் 108 விளையாட்டுகள் (மொழிபெயர்ப்பாளர்: டி.வி. பரமேஸ்வர அய்யர்) 1905 மொழிபெயர்ப்பு
11 குறள் அறத்துப்பால் பகுதி-1 (மொழிபெயர்ப்பாளர்: ராமானுஜ கவிராயர் வெளியீடு: அமெரிக்கன் மிஷன் பிரஸ் மெட்ராஸ்) 1840 உரை
14 திருக்குறள் பெங்காலி மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர்: ஸ்ரீலினிமோகன் சன்யால், பதிப்பாளர்: பங்காலி-சாகித்ய-பரிஷத் கோயில், கல்கத்தா) 1937 மொழிபெயர்ப்பு
15 திருக்குறள் – பர்மிய மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர்: கே.பி.ரத்னம் ,வெளியீட்டாளர்: கன்பே நாத்துதோ சோத சித்திய கல்வி) 1969 மொழிபெயர்ப்பு
16 சீன மொழியில் குறள் (மொழிபெயர்ப்பாளர்: செங் ஹிஸ், வெளியீட்டாளர்; மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வுகள் துறை, கோலாலம்பூர்) 1967 மொழிபெயர்ப்பு
17 குஜராத்தியில் திருக்குறள் (மொழிபெயர்ப்பாளர்: காந்திலால் எல். கலானி; பதிப்பாளர்: ஸ்ரீ ஈஸ்வர்பாய் ஜே. படேல், அஹமதாபாத்) 1971 மொழிபெயர்ப்பு
18 திருக்குறள் (இந்தி) (மொழிபெயர்ப்பாளர்: எம்.ஜி. வெங்கடகிருஷ்ணன், பதிப்பாளர்; சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட், மெட்ராஸ்) 1967 மொழிபெயர்ப்பு
19 திருவள்ளுவநாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும், பொழிப்புரையும் ஆசிரியர்: சுகத்யார், வெளியீடு: லாரன்ஸ் அஸ்லம் பதிப்பகம் சென்னை. 1889 உரை
20 தெலுங்கில் திருக்குறள் (மொழிபெயர்ப்பாளர்: வள்ளுவமூர்த்தி; பதிப்பாளர்: பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கரின் அனாதை இல்ல அச்சகம்) 1892 மொழிபெயர்ப்பு
21 ஆங்கில ஜோடிகளுடன் கூடிய திருக்குறள் (மொழிபெயர்ப்பாளர்: யோகி சுத்தந்தந்த பாரதி; வெளியீட்டாளர்: சைவ சித்தாநாத படைப்புகள் பதிப்பக சங்கம் திருநெல்வேலி லிமிடெட், சென்னை) 1982 மொழிபெயர்ப்பு