பழமொழி நானூறு அறிமுகம்:-
முன்றுறை அரையனார் என்பவரால் பாடப்பெற்றது. 400 வெண்பாக்களை உடையது.
ஒவ்வொரு வெண்பாவின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு திகழ்வது, அப்பழமொழிக்கு ஏற்ற கருத்தை முன்னர்க் கூறுவது, பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல் இதுவே. இதனைப் பின்பற்றிப் பிற்காலத்தில் சதக ஆசிரியர்கள் பாடியுள்ளனர்.
அரிய வரலாற்றுச் செய்திகள் சில இந்நூலில் அமைந்திருக்கின்றன. முடியுடை வேந்தரைப் பற்றிய செய்திகளும், கடையெழு வள்ளல்களுள் சிலரைப் பற்றிய செய்திகளும், இதிகாச புராணக் கதைகளும் இந்நூலில் காணப்படுகின்றன.
சொற்சுருக்கமும் பொருள் ஆழமுடைத்தலுமான சிறப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன.