சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் அறிமுகம்:-

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்களும் சிறுபஞ்ச மூலங்கள் ஆகும்.

இவை உடற்பிணியைப் போக்கும். இவைபோல உள்ளப் பிணியைப் போக்கும் ஐந்து ஐந்து கருத்துகளை ஒவ்வொரு பாட்டிலும் கூறுவதால் இஃது இப்பெயர் பெற்றது.

இதனைப் பாடியவர் காரியாசான். இவரைச் சமணர் என்று கூறினும், இவர் தம் நூலில் சமண சமயக் கருத்துகளைச் சிலவாகவும், சமயப் பொதுக் கருத்துகளை மிகுதியாகவும் கூறியுள்ளார்.

இந்நூலில் கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றையும் சிறப்புப்பாயிரப் பாடல் இரண்டையும் தவிர்த்து 102 வெண்பாக்கள் காணப்படுகின்றன.

சிறுபஞ்சமூலம் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 சிறுபஞ்சமூலம் உரையுடன் (பதிப்பாசிரியர்: சண்முகசுந்தர முதலியார்; வெளியீடு: மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம்) 1875 - (யுவ - மேட ரவி) உரை
2 சிறுபஞ்சமூலம் மூலமும் கா. இராமசாமிநாயுடு விருத்தியுரையும் (பதிப்பாசிரியர் / பரிசோதித்தவர்:எஸ். குமாரசுவாமிப்பிள்ளை, வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை) 1909 உரை
3 சிறுபஞ்சமூலம் வித்துவான் பு.சி. புன்னைவனநாத முதலியார் விளக்கவுரையுடன் ( உரையாசிரியர்: பு.சி. புன்னைவனநாத முதலியார்,வெளியீடு: கழக வெளியீடு) 1936 உரை