திரிகடுகம் அறிமுகம்:-
நல்லாதன் என்பவரால் பாடப்பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் மூன்று மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுவது. சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றும் திரிகடுகம் எனப்படும். இவை உடலுக்கு நலம் தருவன. இவைபோல இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் அமைந்த மும்மூன்று கருத்துக்களும் வாழ்வுக்கு நலம் பயப்பன; ஆதலால், இப்பெயர் பெற்றது.
ஒவ்வொரு செய்யுளின் மூன்றாமடி இறுதியில் தவறாமல் ‘இம்மூன்றும்’, ‘இவைமூன்றும்’, ‘இவர் மூவர்’, ‘இம்மூவர்’ என வரும் தொடர்களுள் ஏதாவதொன்று இடம்பெற்றிருக்கும்.
இந்நூலில் நன்மை பயப்பவை 66 பாடல்களிலும் தீமைபயப்பவை 34 பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.