ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை அறிமுகம்:-

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பவரால் பாடப்பெற்றது. இந்நூலுள் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 செய்யுள்கள் உள்ளன. ஆசாரம் – ஒழுக்கம், ஒழுகுதல் என்பது பொருள்.

இந்நூலில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா ஆகிய வெண்பா வகைகள் அனைத்திலும் பாடல்கள் அமைந்துள்ளன.

மக்கள் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய முறைகளை (ஆசாரங்களை) இந்நூல் கூறுகின்றது.

ஆசாரக்கோவை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 ஆசாரக்கோவை மூலமும் நச்சினார்க்கினியர் பொழிப்புரையும் (பதிப்பாசிரியர்: நாராயணசரணர்; வெளியீடு: ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சியந்திரசாலை, தஞ்சாவூர்) 1899 உரை
2 ஆசாரக்கோவை (பதிப்பாசிரியர்: தி. செல்வக்கேசவராய முதலியார், வெளியீடு: கலாரத்னாகரம் அச்சுக்கூடம், மெட்ராஸ்) 1916 உரை
3 ஆசாரக்கோவை (பதிப்பாசிரியர்: தி. செல்வக்கேசவராய முதலியார்; வெளியீடு: டையோசேசன் அச்சுக்கூடம், மெட்ராஸ்) 1923 உரை